A chance to extend the quarterly vacation?

Advertisment

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி நடைபெற இருப்பதால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நாட்களானது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 'எண்ணும் எழுத்து' பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அக்டோபர் 9 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி தேதிகள் மாற்றப்பட்டதால் காலாண்டு விடுமுறை நாட்களும்நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.