Advertisment

சம்பா மகசூல் இழப்பீடு 560 கோடி ரூபாய் - தமிழக அரசு அறிவிப்பு

nn

Advertisment

சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பைத்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத்தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அரசின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட உள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் பயிர்க் காப்பீட்டுத்திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏழு லட்சம் ஏக்கர் சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டில் சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 மெட்ரிக் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாகப் பெய்த காரணத்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 181 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது 560 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 6 லட்சம் தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்று வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Agricultural TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe