Published on 17/12/2021 | Edited on 17/12/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (17/12/2021) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், டைம்ஸ் குழுமத்தின் தலைவர் பார்த்தா பி.சின்ஹா, இயக்குநர் தீபக் சலுஜா, துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., டைம்ஸ் குழுமத்தின் பொதுமேலாளர் சிவ மெய்யப்பன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.