Advertisment

செயின் பறிப்பு; கொள்ளையரை பிடித்த பொதுமக்கள்! 

chain snatching public caught thief

திருச்சி மாவட்டம், மணப்பாறை பொய்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட் சேவியர்(41). இவரது உறவினர் ஜெய தீபா(22). இவருவரும், தங்கள் உறவினர் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு டேவிட் சேசியரின் இருசக்கர வாகனத்தில் லால்குடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி வந்துள்ளனர்.

Advertisment

சதமப்பாடி பேருந்து நிறுத்ததில் இருவரும் நின்று கொண்டிருந்தபோது, திருச்சி கீழசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(28). லால்குடி கீழபெருங்கனூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்(22) ஆகிய இருவரும், டேவிட் சேவியர் மற்றும் ஜெய தீபா இருவரையும் தாக்கிவிட்டு, 2 சவரன் தங்க ஜெயின், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளனர். அப்போது ஜெயதீபா போட்ட சத்தத்தில், அங்கிருந்த பொதுமக்கள் மணிகண்டனை விரட்டி பிடித்தனர்.

Advertisment

இதுகுறித்து டேவிட் சேவியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சமயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சவரன் நகை, செல்போன், 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மணிகண்டன் மீது கொள்ளிடம், கோட்டை, கண்டோன்மென்ட் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe