
செங்கல்பட்டில் கீழே விழுந்த கம்மலை எடுக்க முயன்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டை சேர்ந்த சுபலட்சுமி என்பவர் இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது, அவருடைய கம்மல் கீழே விழுந்துள்ளது. கம்மல் கீழே விழுந்ததை அறிந்த சுபலட்சுமி அதனை தேடிக் கொண்டே இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது குறிப்பிட்ட இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் நின்று கம்மலை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவருடைய தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.