Skip to main content

நீதிபதி மனைவியிடம் செயின் பறிப்பு- இரு இளைஞர்கள் கைது!

Published on 25/07/2018 | Edited on 25/07/2018

கோவை மாவட்டம் சூலூரில் நீதிபதி மனைவியிடம் கடந்த ஜுன் மாதம் செயின் பறித்த வழக்கில் இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

chain

 

 

 

கோவை மாவட்ட சூலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி தனது மனைவி மகேஷ்வரியுடன் அவினாசி சாலையில் இருந்து ரயில்வே பீடர் ரோட்டில் சூலூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது, சூலூர் குளம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, நீதிபதி வாகனத்தை வழிமறித்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மகேஸ்வரி அணிந்திருந்த 9 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். வழக்கு பதிவு செய்த சூலூர் காவல்துறையினர், நேற்று இரவு சந்தேகத்தின் பெயரில் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், போத்தனூரை சேர்ந்த மணிகண்டன், மலுமிச்சம்பட்டியை சேர்ந்த சபீர் ஆகியோர் சூலூர், செட்டிப்பாளையம் ஆகிய புறநகர பகுதிகளில் பல்வேறு செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும், நீதிபதி மனைவி செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடையதும்  தெரியவந்தது. மேலும், திருட்டுக்காக பயன்படுத்தி வந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்