Advertisment

பதறவைக்கும் செயின் பறிப்பு! சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி வைரல்! 

Chain snatching! CCTV Views go viral!

கரூரில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த மூன்று பெண்களில் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதன் பரபரக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகர், குமாரசாமி அபார்ட்மெண்ட் அருகில் இன்று (12ம் தேதி) காலை 6:00 மணி அளவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த 3 பெண்களில், ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பித்தனர். இதில் அந்தப் பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டு உடன் இருந்த பெண்கள் அதிர்ச்சியுற்றனர்

Advertisment

அதனைத் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

karur police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe