மனைவியிடமே செயின் பறிப்பு; தலைமறைவான ரவுடியை தேடும் போலீசார்

The chain snatched from the wife; Police searching for absconding raider

கன்னியாகுமரியில் மனைவியிடமே பட்டப் பகலில் கணவன் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன். அந்தப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர் மேக்காமண்டலத்தில் உள்ள பிரியா என்பவரை காதலித்து ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைக் ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் தங்கை முறை கொண்ட ஒரு பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையை செய்ததாக பிரியன் மீது புகார் எழுந்தது. இதனால் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியா அவரை விட்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதிபள்ளிக்குச் சென்ற தனது குழந்தையை கூலிப்படையை வைத்து பிபின் கடத்தி சென்றதாக பிரியா போலீசில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக பிபின் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த பிரியன் அடகு கடைக்குச் சென்ற தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து தாக்கி அவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பிரியாவின் கழுத்திலிருந்த ஏழு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றார். அதேபோல் தன் மீது கொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் எனவும் மிரட்டினார். தாக்குதலில் காயமடைந்த பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மணவாளக்குறிச்சி போலீசார் ரவுடி பிபின் பிரியனைத்தேடி வருகின்றனர்.

Kanyakumari police rowdy
இதையும் படியுங்கள்
Subscribe