Skip to main content

சிறுவர்களுக்கு செயின் பறிக்க பயிற்சி ..! சென்னையில் கொள்ளை கும்பல் பிடிப்பட்டது..!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Chain snatch training for boys ..! Robbery gang caught in Chennai ..!

 

 

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் 55வயதான  லட்சுமி, சென்னை துறைமுக மருத்துவமனையில் உதவியாளராக பணி செய்து  வருகிறார்.  இரவு வேலைகளை முடித்துவிட்டு இரவு  8 மணி அளவில் வீட்டுக்கு செல்ல பார்த்தசாரதி சாமி தெருவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த மர்மநபர் ஒருவர், அவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். 

 

சிறிது தூரம் ஓடிய அந்த மர்மநபர் மற்றொரு நபரிடம் செயினை கொடுத்துவிட்டு மாயமானார். தங்க செயினை பறிகொடுத்த  லட்சுமி, ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக விசாரணையை தொடர்ந்த, ஐஸ் ஹவுஸ் போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளின் பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் அதேபகுதியைச் சேர்ந்த பிரபல செயின் பறிக்கும் கொள்ளையன் விஜய் என்ற சொறி விஜய், மற்றும் அவனது தொழில் கூட்டாளி சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதே வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த செயின் பறிப்பில் மூன்றுபேர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜய் என்ற சொறி விஜயும், சக்திவேலும் இணைந்து 17 வயது சிறுவனுக்கு எப்படி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் அந்த சிறுவன் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

 

இந்த வழக்கில் ஐஸ்ஹவுஸ் போலீசார் புகார் அளித்த ஆறு மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள சொறி விஜய் பலமுறை குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டு சிறை சென்றுவந்தவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் சில சிறுவர்களுக்கு செயின்பறிப்பு பயிற்சி அளித்தாக தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரவு நேரத்தில் செயின் பறிப்பு; சாலையில் அலறித்துடித்த பெண்; வைரலாகும் சிசிடிவி காட்சி

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

Chain flush at night; Screaming woman on the road; CCTV footage goes viral

 

திருப்பூரில் இரவில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

திருப்பூர் மாவட்டம் மடத்துபாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது மனைவி யுவராணி மற்றும் மகன் கனிஷ்க் உடன் உறவினர்கள் வீட்டுக்கு திருமண விழாவிற்கு சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்பொழுது திருப்பூர்-அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் வந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், யுவராணி கழுத்தில் இருந்த பத்தரை சவரன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த யுவராணி மற்றும் அவரது மகன்  ஆகியோர் சாலையில் உதவி கேட்டு  அலறும் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Next Story

செயின் பறிக்க முயன்று தலை தெறிக்க ஓடிய இளைஞர்கள்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

attempt to snatch the chain in broad daylight; The youths left the bike and ran because of the shouting

 

கடலூரில் பட்டப்பகலில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் செயின் பறிக்க முயன்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் தனது இரண்டு மகன்களுடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தார். இந்திரா நகர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அவருடைய ஸ்கூட்டியை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், திடீரென பாக்கியலட்சுமி கழுத்திலிருந்த செயினை பறிக்க முயன்றனர்.

 

உடனடியாக பாக்கியலட்சுமி மற்றும் அவரது மகன்களான சிறுவர்கள் கத்தி கூச்சலிட்டனர். ஆனாலும் விடாத அந்த இளைஞர்கள் பாக்கியலட்சுமி கழுத்தில் இருந்து சங்கிலியை இழுக்க, அவர் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்த நிலையில், செயினை பறிக்க முயன்ற அந்த இளைஞர்கள், அவர்களுடைய இருசக்கர வாகனத்தையும் அதே இடத்தில் விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.