திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் அக்ரஹாரத்தில் வசிப்பவர் சுசீலா (70). மூதாட்டி சுசீலா, தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்பிலான தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதில் சுசிலாவின் கழுத்து மற்றும் காதுகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மூதாட்டி சுசீலாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சுசீலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.