Advertisment

செயின் பறிப்பு திருடனை விரட்டிப்பிடித்த சிறுவனுக்கு டி.வி.எஸில் வேலை!! சிறுவன் சூர்யாவிற்கு குவியும் பாராட்டுக்கள்!!

சென்னை அண்ணாநகரில் செயின் பறிப்பு ஈடுபட்ட திருடனை ஒரே ஆளாக விரட்டிப்பிடித்த சிறுவனின் திறமையை பாராட்டி அவனுக்கு டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற போலீசார் உதவியுள்ளனர்.

Advertisment

rubber

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை திருமங்கலத்தில் பெண்மருத்துவர் ஒருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை அதே திருமங்கலம் பகுதியில் குடிசை பகுதியில் ஏழாம்வகுப்புவரை படித்துவிட்டு குடும்ப வறுமை காரணமாக மெக்கானிக் வேலை பார்த்துவந்த 17 வயது சிறுவன் சூர்யா செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த நபரை ஓடிப்பித்து தனியொரு ஆளாக போலீசாரிடம் ஒப்படைத்தான்.

Advertisment

இந்த தீர செயலை கேள்விப்பட்டகாவல் ஆணையர் விஸ்வநாதன் சிறுவன்சூர்யாவை அழைத்து பாராட்டினர். மேலும் அவரது குடும்ப நிலையை விசாரித்த காவல்துறையினர் உதவியால்அவருடைய வாழ்கை மேம்பாட்டிற்காக பிரபல டி.வி.எஸ் நிறுவனத்தில் மெக்கானிக் துறையிலேயே பணியில்சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது இந்த தீரச்செயலை பாராட்டிபல தனியார் அமைப்புகள் அவருக்கு 3 லட்சம் ரூபாய்க்கு நிதியுதவி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

police chain snatching
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe