Advertisment

திருச்சியில் நடைபெற்ற போட்டிகள்; வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

Certificates for students who won competitions in Trichy

அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் பெண்கள் மதரஸா அறக்கட்டளை சார்பில் திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இன்ஜினியர் இப்ராஹிம் ஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன், வக்கீல் சையத் மதானி, அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பாஸ் அலி, அப்துல்லா நூரி, முகமது யூசுப் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

Advertisment

முகமது அலி ஜின்னா நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி. பாபு, மாவட்ட இணை செயலாளர் சுலைமான், முன்னாள் திமுக வட்டச் செயலாளர் சிந்தாமணி பாலமுருகன், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகியும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட இணை செயலாளருமான பஜார் மைதீன், கோட்டை கிருஸ்து நாதர் ஆலயத்தின் தலைமை ஆயர் ராஜையா, புனித ஜான்பால் உரையாடல் மன்றம் இயக்குநர் சார்லஸ், தென்னிந்திய திருச்சபை கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

Advertisment

விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் சையது சுல்தானா, ரஹிமான் பேகம், யாஸ்மின், பஜார் மைதீன், யாஸ்மின் பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

trichy students
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe