கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று தமிழகத்தில் 29 ஆயிரம் என்ற அளவில் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக பாதிப்பு என்பது சற்று குறைந்து பதிவாகி வருகிறது. முன்னதாக சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழைசமர்ப்பித்தே பிறகேபயணம் மேற்கொள்ள முடியும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில் புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே தற்பொழுது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசுரத்து செய்த நிலையில் தற்போது சென்னை தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.