A ceremony attended by Prime Minister Modi and Chief Minister M. K. Stalin; Security arrangements are strict

Advertisment

கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத்துவக்கிவைத்தார். இந்நிலையில் வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிரதமர் வருவதற்கு உண்டான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின்பவளவிழா வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றுகிறார்.

Advertisment

இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையினர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரையிலிருந்து திண்டுக்கல்லிற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார். இதற்காக சின்னாளப்பட்டி அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் விமான நிலையம் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.