
திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளுநர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டி வெகுமதியளித்தார். இந்த தனிப்படை குழுவில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் வீரமணி, முதல் நிலை காவலர் வினோத், கணேசன், ஆயுதப்படை காவலர்கள் நெப்போலியன், ரபேல்தாஸ் மற்றும் சரவணகுமார் ஆகியோர் உள்ளடக்கம்.
இவர்கள் கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த 11ம் தேதி அன்று வாகனச் சோதனை நடத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 ஜே.சி.பி. வாகனங்கள் மற்றும் 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். அதே போல் பெரம்பலூர் குன்னம் காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன், தலைமைக் காவலர் மாரிமுத்து, முதல் நிலை காவலர் கார்த்திகேயன், மணிகண்டன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை உள்ளடக்கிய தனிப்படையினர் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த (11.08.2021) அன்று வாகனச் சோதனை நடத்தினர்.
அதில்மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 ஜே.சி.பி. வாகனங்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களைக் கைப்பற்றி சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படையினரை, மத்திய மண்டல காவல்துறை தலைவர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)