Advertisment

வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று சென்னை வருகை 

Central team to visit Chennai today to inspect flood damage

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு என பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் முதல் கட்ட நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ. 5,060 கோடி கோரியிருந்த நிலையில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் ஒரு குழுஇன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe