Central Rural Development Department team visited integrated farm

எம்.ஆர். பாளையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையை மத்திய ஊரக வளர்ச்சித்துறை குழுவினர் பார்வையிட்டனர்.

Advertisment

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே சனமங்கலம் ஊராட்சியில் உள்ள எம்.ஆர். பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பண்ணையைதிருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் டெல்லியிலிருந்து வருகை தந்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை குழுவினர் பார்வையிட்டுச் சென்றனர்.

Advertisment

விவசாயிகள் விவசாயத்தில் நஷ்டம் அடையாமல் இருக்கதமிழகத்தில்முதல்முறையாக திருச்சி மாவட்டத்தில் முன் உதாரணமாக மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டும் அளவிற்கு நாட்டு மாடுகள், நாட்டுக்கோழி, புறா, ஆடுகள், மீன் பண்ணை, வாழைத் தோட்டம், பூந்தோட்டம், உள்ளிட்டவை சனமங்கலம் ஊராட்சியில் உள்ள எம்.ஆர். பாளையம் கிராமத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கருவேல மரங்களை அகற்றி ரூபாய் 14.23 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டது. இந்த பண்ணையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி திறந்து வைத்தார்.

Central Rural Development Department team visited integrated farm

இந்நிலையில் இந்த பண்ணையத்தை டெல்லியிலிருந்து வருகை தந்த மத்திய ஊரக வளர்ச்சித் துறையினர் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் தேவநாதன் மற்றும் ஊராட்சித் துறை உதவி இயக்குநர் கங்கா தாரணி, மணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்தி முருகன், சனமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஹேமலதா சீனிவாச பெருமாள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.