court

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெற்ற மாணவர்கள், பிற மாநிலங்களில் விண்ணப்பித்துள்ளார்களா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழக மருத்துவக் கல்லூரிகளில், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த 104 மாணவர்கள், இரட்டை இருப்பிடச் சான்று வழங்கி மாணவர் சேர்க்கை பெற்றதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த மாணவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான பட்டியலை தாக்கல் செய்யும்படி, மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

அதன்படி தாக்கல் செய்யப்பட்ட பட்டியலை ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் குழுவையும் நியமித்தார். இக்குழு அளித்த அறிக்கையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்று எம்.பி.பி.எஸ் சேர்க்கை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பெற்ற மாணவர்கள், வேறு மாநிலத்தில் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனரா என்ற விபரங்களை சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இந்த வழக்கு மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.