சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Central Railway Station unkonwn person incident

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

காவல் கட்டுப்பாட்டு அறையைத்தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமான சூழலும் ஏற்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். மேலும் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் ஏற்கனவே பலமுறை வெடி குண்டு மிரட்டல் புகாரில் கைதானவர் என்றும் கூறப்படுகிறது.

Chennai police
இதையும் படியுங்கள்
Subscribe