Advertisment

சென்ட்ரல் ரயில்நிலையம் - விமானநிலையம் வரை இன்று முதல் மெட்ரோ சேவை தொடக்கம்!

metro

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரையும் சின்னைமலையில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வரையும் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது.

சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும் டி.எம்.எஸ்.லிருந்து சின்னமலை வரையிலுமான சுரங்கப்பாதை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை விமான நிலையம் முதல் எழும்பூர் நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக இரவு பகலாக நடைபெற்றன. இப்போது இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த வழித்தடத்தில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆகிய 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

metro train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe