Advertisment

மத்தியச் சிறைகளை டிரோன் மூலம் கண்காணிக்க முடிவு

Central prisons decided to monitor by drone

மத்திய சிறைச்சாலைகளை டிரோன் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க தமிழக சிறைத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் உட்படச் சிறை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெறத்தமிழக அரசுக்கு சிறைத்துறை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

Advertisment

மத்திய சிறைகளில் கைதிகளிடையே ஏற்படும் மோதல்கள், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களைத்தடுக்கும் வகையில்,டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனச் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய சிறைச்சாலை வளாகங்கள்சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Drone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe