Central Ministry of Home Affairs Award to 5 Tamil Nadu Policemen!

Advertisment

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடக்கூடிய பொது இடங்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் அரசின் சார்பில் சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் புலனாய்வுத்துறையில் சிறந்து விளங்கிய 151 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 5 பேருக்கு இந்த விருதானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கூடுதல் எஸ்.பி கனகேஸ்வரி, ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி, உதவி ஆய்வாளர் செல்வராஜன், புதுச்சேரி எஸ்.ஐ.ராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.