central minister subash sarkar said Tn govt did not protest against new education policy

Advertisment

இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சி துவாக்குடி என்ஐடியில் மாணவர் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார்.

அதன் பிறகு பாஜக நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இணையமைச்சர், “இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையைத்தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பின்பற்றப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்தாலும், எழுத்துப் பூர்வமாக அவர்கள் எதிர்க்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத்தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறார்கள்” என்றார்.

ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு மிரட்டுவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழக ஐபிஎஸ்,ஐஏஎஸ்அதிகாரிகளை மிரட்டவில்லை. அனைத்து அதிகாரிகளையும் சமமாக நடத்துகிறோம் என்பதே உண்மை என இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார்.

Advertisment

மேலும்,2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க சிறப்பான வெற்றியைப் பெறும்.அதில் திருச்சி மாவட்டத்தின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்றார்.