Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அந்தவகையில், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று (26/03/2021) தமிழகம் வந்தார். அதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைப்போல், இன்று துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ்.பி செல்வத்தை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிபூக்கடைப் பகுதியில் வாக்கு சேகரித்துபிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

Advertisment