Advertisment

சிதம்பரம் நடராஜர் ஆலையத்தில் மத்திய அமைச்சர்!

Chidambaram

சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு மத்திய நிலக்கரி துறை இணை அமைச்சர்ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி இன்று வந்திருந்தார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்கான் லால் சாகு (சட்டீஸ்கர்), சாயா வர்மா, ராஜேஷ் வர்மா (உ.பி.), ரவீந்திர குமார் பாண்டே (ஜார்கன்டு) ஆகிய நான்கு பேர் வந்திருந்தனர். சுவாமி தரிசனம் செய்த அவர்களுக்கு உயரிய மரியாதைத் தந்து கவுரவித்தது கோவில் நிர்வாகம்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

தரிசனம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரிதுறை இணை அமைச்சர் செளத்திரி, "நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் 20 சதவீத மானிய தொகை முழுவதும் நெய்வேலி சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த மக்களின் நன்மைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரின் கல்வி, பொது சுகாதாரம், குடிநீர், கழிப்பறை ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் முழு ஒதுக்கீடும் சென்று சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெய்வேலியை சுற்றியுள்ள மக்களுக்கு மட்டுமே இந்த ராயல்ட்டி தொகை ஒதுக்கீடு செய்யபட்டிருக்கிறது" என கூறினார்.

Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe