central govt auction announcements source of  dissatisfaction fishermen

கடல் வளத்தையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்வதோடு, அதற்காக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திட்டமா ? - மீன்பிடி பொருளாதாரத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

Advertisment

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பு கொள்கையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஏல அறிவிப்பில் தென் தமிழக ஆழ்கடலின் 9990.96 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் இடம்பெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழ்நாட்டை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் அப்பகுதிகளில் இருக்கும் அரிய வகை ஆமைகள், பாலூட்டிகள் உள்ளிட்ட முக்கியமான கடல்வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்கக் கூடும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisment

ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் போது வெளியாகும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறைவதோடு, மீன்பிடி பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், மத்திய அரசின் இந்த ஏல அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கடல் வளத்தையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்வதோடு, அதற்காக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.