Advertisment

'ஒன்றிய அரசின் அறிவிப்பு ஆறுதல்தான்'-முதல்வர் ஸ்டாலின்!

central govt announcement is a consolation' - Chief Stalin!

Advertisment

மருத்துவப் படிப்புகளில் ஒன்றிய அரசு இட ஒதுக்கீடு அறிவித்தது ஆறுதல் தருவதாக உள்ளதாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஓபிசி பிரிவுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. சமூக நீதி வரலாற்றில் முக்கிய நிகழ்வாக உள்ளது. 2021-22-ல் இருந்து மொத்தம் 4,000 ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படிபிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீடுஎன்பதேதிமுகவின் கோரிக்கை.

50 சதவீத இடஒதுக்கீட்டை அடையும்வரைதிமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். சமூகநீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தைதிமுகவும்,இந்த அரசும் தொடர்ந்து நடத்தும்'' எனக் கூறியுள்ளார்.

stalin reservation Central Government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe