CBI

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தின் கலெக்டராக இருப்பவர் ரோகினி. இவரது கணவர் விஜேந்திர பிதாரி. காவல்துறை எஸ்.பி.யாக இருந்தஇவர் மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஈடுபட்டவர்களை கடுமையாக தாக்கினார். இதனால் அவர் தமிழ்நாட்டில் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்டார்.

Advertisment

தற்போது அவர் பெங்களூருவில் சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் ரோகினியை தொடர்புகொண்டு, தனது மகன் மிதுன் மற்றும் சம்மந்தி சுப்பிரமணி ஆகிய இரண்டு பேர் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய்களை புதிய இரண்டாயிரமாக வைத்திருந்ததாக ஒரு வழக்கு உள்ளது. விஜேந்திர பிதாரி மூலமாக அந்த வழக்கில் இருந்து தனது மகனையும், சம்மந்தியையும் விடுவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisment

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இந்த தகவல் பரவ, மத்திய சிபிஐ அதுபோன்ற எந்த விஷயங்திலும் தலையிடக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளது.