Advertisment

''கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது'' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்!

Advertisment

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முடிவைக் கைவிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். தமிழக மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது'' என தெரிவித்துள்ளார்.

Central Government karnataka vijayakanth dmdk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe