Skip to main content

வீடுகளும், கழிவறைகளும் கட்டாமலேயே கட்டியதாக வாழ்த்து கடிதத்தை அனுப்பியுள்ள மத்திய அரசு; கோபத்தில் பொதுமக்கள்...

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

The central government that sent the congratulatory letter that the houses and toilets were built without being built

 

 

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகளும், கழிவறைகளும் கட்டாமலேயே கட்டியதாக வாழ்த்து கடிதத்தை மத்திய அரசு அனுப்பியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பாரத பிரதமர் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை வீடுகள் கட்டாமலேயே கட்டிமுடிக்கப்பட்டதாக கூறி பல கோடி ரூபாயை கொள்ளையடித்து கண்டுபிடிக்கப்பட்டு, அதில் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் மன்னார்குடி அடுத்துள்ள தேவேந்திரபுரம், பாமணி, கர்ணாவூர் , தருசுவேளி உள்ளிட்ட  கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வீடுகளை நன்கு பராமரித்து, சுத்தமாக வைத்து பாதுகாப்புடன் வாழ வேண்டும் என பொதுமக்கள் பலருக்கும் மத்திய அரசிடமிருந்து வாழ்த்து கடிதம் வந்திருக்கிறது, கடிதத்தை கண்ட பொதுமக்கள் சிட்டிசன் படத்தை மீஞ்சும் அளவிற்கு ஊழல் நடந்திருக்கே என மூச்சு, பேச்சு இல்லாமல் வாயடைத்து நிற்கின்றனர்.

 

The central government that sent the congratulatory letter that the houses and toilets were built without being built

 

இது குறித்து அங்குள்ள சமுக ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம், "கர்ணாவூர் ஊராட்சியில் சுமார் 1,500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அனைவரும் சாதாரன ஏழை, கூலி தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்காக  கடந்த 2018 - 2019  ஆண்டிற்கான பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் மத்திய அரசின் கழிவறை திட்டத்தில் கழிவறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ணாவூர் ஊராட்சியில் உள்ள பயனாளிகளுக்கு 274 வீடுகள் மற்றும் 890 கழிவறைகள் கட்டாமலே ஊராட்சி செயலர் அதிகாரிகள், ஆளும் கட்சியினர் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்து சில பயனாளிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயார்செய்து பல கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.

 

இந்நிலையில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் முழுமையும் பயனாளிகளுக்கு  அரசு கட்டி கொடுத்த வீடுகளை பார்வையிடுவதற்காக திருவாரூர் மாவட்ட  கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் வீடுகள் மற்றும் கழிவறைகளை கட்டாமலே கட்டியதாக கணக்குக்காட்டி மோசடி செய்துள்ளது கண்டுபிடித்துள்ளனர். 

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். 

 

இந்த நிலமையில்தான் வீடு கட்டாதவர்களுக்கு வீடு கட்டியதற்கான வாழ்த்து செய்தி மத்திய அரசிடம் இருந்து கடிதமாக வந்துள்ளது. கடிதத்தில் வீட்டை தூய்மையாக பராமரித்து வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என தெரிவித்துள்ளனர், இது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சியதுபோல் இருக்கிறது". என்கிறார் ஆதங்கமாக.

 

இந்தக்கூத்து அடங்குவதற்குள் நாகப்பட்டினத்தில் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டியதாக அங்குள்ள மக்களுக்கும் வாழ்த்து கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் ஒருவர் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.