Skip to main content

நியுட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி!

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
NEUTRINO


தேனி அருகே உள்ள நியுட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பி.எஸ். மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள போடி தொகுதியில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியுட்ரினோ ஆய்வு திட்டத்தை செயல்படுத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வந்தது. இதற்கான ஆயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. நியுட்ரினோ திட்டத்தை நிறைவேற்றினால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அப்பகுதி பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு நியுட்ரினோ திட்டத்தை செயல்படுத்த முக்கிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. விதிமுறைகளை தளர்த்தி சிறப்பு நிகழ்வாக இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் சில நிபந்தனைகளோடு அனுமதி வழங்கியுள்ளது.
 

NEURINO


இந்த நியுட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற இருக்கும் நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தது போலவே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியையும் பெற வேண்டும். தேனி மாவட்டத்தில் அம்ரப்பர் மலைப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதால் தேசிய வனவிலங்கு வாரியத்திடமும் நியுட்ரினோ திட்டம் துவங்குவதற்கு அனுமதி பெற வேண்டும். இந்த நியுட்ரினோ திட்டத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தினமும் 3லட்சத்து 40ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அம்பரப்பர் மலை அடிவார பகுதியில் தான் 18ம் கால்வாய் திட்டம் செயல்பட தொடங்க இருக்கிறது. அந்த திட்டம் செயல்பட தொடங்கினால் அதன்மூலமே நியுட்ரினோ திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பொட்டிபுரம் பஞ்சாயத்தில் உள்ள புதுக்கோட்டை, புதூர், சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம் உள்பட அப்பகுதியைச் சேர்ந்த சில கிராமங்களுடன் தொகுதி மக்களும் தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம், போடி, கோம்பை, சின்னமனூர் உள்பட மாவட்ட அளவில் உள்ள பல ஊர்களில் இந்த நியுட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் நியுட்ரினோ திட்டம் இப்பகுதியில் செயல்பட தொடங்கினால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். அதோடு அப்பகுதி மக்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும், அதோடு அப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஆடு, மாடுகளை வைத்துக்கொண்டு அந்த அம்பரப்பர் மலைப்பகுதியில் மேயவிட்டுத்தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
 

NEUTRINO 3


அப்படி இருக்கும் போது இப்பகுதியில் நியுட்ரினோ திட்டம் வந்தால் ஆடு, மாடு மேய்ச்சலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நியுட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திடீரென அனுமதி கொடுத்திருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இருந்தாலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரவும், தொடர்ந்து இப்பகுதியில் நியுட்ரினோ திட்டம் செயல்படுத்த கூடாது என போராட்டத்தில் குதிக்கவும் தயாராகி வருகிறார்கள்!

சார்ந்த செய்திகள்

Next Story

நியூட்ரினோ ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்! தேனியில் பரபரப்பு!!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் தொகுதியான போடி தொகுதியில் உள்ள பொட்டிபுரத்தில் இருக்கும் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  ஏற்கனவே திட்டம்  தீட்டி திட்டப் பணிகளையும் மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துடன் மட்டுமல்லாமல் போராட்டத்திலும் குதித்தனர். அதோடு வைகோவும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மூலம் நியூட்ரினோ ஆய்வகம் மூலம் வரும் பாதிப்புகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்.

approval to neutrino project in theni


அதோடு மட்டுமல்லாமல் நியூட்ரினோ திட்டம்  இப்பகுதியில் வரக்கூடாது என ஐகோர்ட்டு மூலம் இடைக்கால தடை உத்தரவும் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் மத்திய அரசு தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கபடும் என திட்டவட்டமாக கூறியதுடன் மட்டுமல்லாமல் மாநிலங்கள் அவையிலும் மத்திய  இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக பதிலளித்திருக்கிறார். அதோடு மத்திய அணுசக்தி துறையும் அந்த  நியூட்ரினோ ஆய்வகம் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறது.

 

approval to neutrino project in theni


அதோடு இந்தியாவிலேயே முதன்முதலாக நியூட்ரினோ ஆய்வகம் தேனி மாவட்டத்தில்தான் அமைய இருக்கிறது என்று  மத்திய அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.  இப்படி திடீரென மீண்டும் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள மக்களை  பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன் மட்டும்மல்லாமல் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Next Story

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை!- பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு!!

Published on 02/11/2018 | Edited on 02/11/2018

 

neutrino

 

தேனியில் நியூட்ரினோ திட்டம் செயற்படுத்த அனுமதிக்க கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று அது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ ஆய்வகப்பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது