Advertisment

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்; மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஏற்கனவே கடந்த மாதம்6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில்தற்போது கிருஷ்ணகிரி, திருவள்ளுர், நாகை ஆகியமூன்று இடங்களில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில்இந்த கல்லூரிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Central government to permission 3 more medical colleges in Tamil Nadu

3 கல்லுரிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசு மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. புதியதாக நிறுவப்படவுள்ள இந்த 3 மருத்துவக்கல்லூரிகளால் தலா ஒரு கல்லூரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால் எம்.பி.பி.எஸ் இடங்கள் 4,600 ஆக உயரும்.

தற்போது புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை தவிர பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மட்டும் அரசு மருத்துவக்கல்லூரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Central Government Tamilnadu medical college
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe