/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/760_1.jpg)
நீதித்துறையில் ஒன்றிய அரசின் தலையீட்டை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீதித்துறையில் ஜனநாயகம் நிலவவும், மத்திய அரசு தலையிடக்கூடாது எனவும், நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும் வலியுறுத்தி நேற்று (30.1.2022) வழக்கறிஞர் சங்கத்தின் (DAA) சார்பாக உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரமான முறையில், ஜனநாயக அமைப்பாக நீதித்துறை செயல்பட வேண்டும் என கோசம் எழுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அனைவரும் அச்சமற்ற, சுதந்திரமான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஜனநாயகப் பூர்வமான நீதித்துறை செயல்பாடு வேண்டும் எனவும், மத்திய அரசு இதில் தலையிடக்கூடாது எனவும், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தும், கண்டன உரையாற்றினார்கள்.
இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கு.பாரதி, DAA மாநில பொருளாளர் வழக்கறிஞர் சங்கர் உட்பட வழக்கறிஞர்களும், ஜனநாயக முற்போக்கு இடதுசாரி வழக்கறிஞர் சங்கங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மதநல்லிணக்கத்திற்காக குரல் கொடுத்த மதவெறியர் நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)