ADVERTISEMENT

தினக்கூலிகளாக வேறு மாநிலத்தில் உள்ளவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு

05:28 PM Mar 28, 2020 | kalaimohan

கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலத்தில் தொழிலுக்காக, தினக் கூலிகளாக ஏதோ ஒருவகையில் வேறு மாநிலத்தில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல முயற்சித்த போதும் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வெளிமாநிலத்தில் இருந்து தொழில் புரிவதற்காக வந்து தங்கி உள்ளவர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும், அதற்கான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் தற்போது மாநில அரசுகளுக்கு அறிவிப்பை கொடுத்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT