Skip to main content

கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018


கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மார்த்தாண்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும். தமிழகத்தின் நீர் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதற்கு பாஜக 100 சதவீதம் துணை நிற்கும்.

இப்பிரச்சனை தொடர்பாக நேற்று கூட டெல்லியில் மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து பேசினோம். அவரிடம் தமிழக நீர் தேவைகள் குறித்து எடுத்துரைத்தோம். அவற்றை கவனமாக கேட்டுக்கொண்டதோடு இப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் முக்கிய இடங்களில் ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ளன. அதற்கு விளக்கம் காணவே மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. ஸ்கீம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை.

கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

இதற்காக பாஜக முயற்சி செய்து வருகிறது. நவநீதகிருஷ்ணன் என்னிடம் பேசும்போது எதுவும் கூறவில்லை. இப்பிரச்சனையை அரசியல் ஆக்க காங்கிரஸ் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்