thamimun ansari

மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை சமர்பித்துள்ளது.

Advertisment

வருமான வரி உச்சவரம்பை 5 லட்சம் என்ற அளவில் உயர்த்தியிருப்பது மட்டுமே இதில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மீனவர்களுக்கு தனித்துறை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை என்றாலும், இது சாத்தியமா? என்ற கேள்விகள் நீள்கிறது.தவறான புள்ளி விபரங்கள் மூலம் பட்ஜெட்டுக்கு மலர் மாலை சூட முயற்சித்திருப்பது தெரிகிறது.

Advertisment

4 1/2 ஆண்டு காலம் மக்களை கசக்கி பிழிந்து விட்டு, இப்போது காயங்களுக்கு மருந்துப் போட முயற்சிக்கிறார்கள். இது கடைசி நேர கதறலாக கேட்கிறது.

எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.வழக்கம் போல சிறுபான்மையினர் களுக்கான நலன்கள் பின்தள்ளப்பட்டுள்ளன.m தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் கண்டுக்கொள்ளப்படவில்லை.

ஏறத்தாழ தென்னிந்தியா புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.இந்த பட்ஜட் தண்ணீரில் வரைந்த ஓவியமாகும் என மனித நேய ஜனநாயக கட்சி கருதுகிறது. விமர்சிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.