அண்ணா பல்கலைக்கழகத்தை அபகரிக்க மத்திய அரசு முயற்சி!-ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு!!

Central government attempts to hijack Anna University! -I.Periyasamy

அண்ணா பல்கலைக்கழகத்தை அபகரித்து மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருவதாக திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும் என்றும்,இதனை பிரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்-பழநி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், திமுகமாநில துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசும் போது,திமுக சார்பில் அண்ணா பல்கலைகழகம் சார்பில் பல மாவட்டங்களிலும் உறுப்புக் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டது.இதில் பயின்ற மாணவர்கள் அறிவு சார்ந்தவர்களாக மாறி நாடு முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இத்தனை சிறப்புமிக்க அண்ணா பல்கலைக்கழகத்தை கபளிகரம் செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது.

இதனை திமுக தொடர்ந்து எதிர்க்கும். மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய எழுதிய சூரப்பாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.இதனை தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது என்று கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும்,பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி,ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, இளைஞரணி அமைப்பாளர்கள் கணேசன், ஹரிகரசுதன், பிலால் உசேன்,விவேகானந்தன் உட்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Annamalai University i periyasamy
இதையும் படியுங்கள்
Subscribe