சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு 6 லட்சம் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. 45 கிலோ அளவு கொண்ட யூரியா மூட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலை ரூபாய் 266.50 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் உர விற்பனை நிலையங்களில் 1.74 லட்சம் டன் யூரியா இருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

 Central Government Action For Allotting Urea To Tamil Nadu

விவசாயிகள் ஆதார் அட்டையுடன் சென்று உர விற்பனை நிலையங்களில் தேவையான யூரியாவை பெற்று கொள்ளலாம். மேலும் விவசாயிகள் 'உழவன் கைபேசி செயலி' மூலம் கூட்டுறவு, தனியார் உர விற்பனை நிலையங்களில் உர இருப்பை அறியலாம்.