
கரூரில் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் வெங்கடேசன், கார்த்திக் ஆகியோர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது உறவினர்களிடம் மத்திய பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக வெளியான புகாரில்தற்போது இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow Us