/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-5_89.jpg)
பருவம் தவறிப் பெய்த கனமழையால், சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகடெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த மத்திய குழுவால்விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத்தயாராக இருந்த நெற்பயிர்கள், சமீபத்தில் பெய்த கனமழையால்நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. அதன் நெல்மணிகளின் ஈரப்பதம் அதிகரித்தும்முளைவிட்டும் காணப்படுகிறது. இதனால் 25 சதவீத ஈரப்பதம் உள்ள நெற்பயிர்களைகொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு முதல்வர், நெல் கொள்முதல் விதிமுறைகளைத்தளர்த்த வேண்டும் எனவும்விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும்பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட குழுவைடெல்டா பகுதிகளுக்கு அனுப்பிநெற்பயிர்களின் ஈரப்பதத்தை ஆய்வு செய்துஅறிக்கை அனுப்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி யூனூஸ், பிரபாகரன், போயாஆகிய மூன்று தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட குழுதஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்நெல்மணிகளின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர்.
அந்த வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு, கச்சநகரம்,வலிவலம், பட்டமங்கலம் உள்ளிட்ட ஏழு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்நெற்பயிர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அழுகிய நிலையில்முளைத்துப் போன நெற்கதிர்களைகையில் ஏந்தியபடி நின்ற விவசாயிகள்அதை அதிகாரிகளுக்கு காண்பித்தனர். அதுமட்டுமின்றி, மழையினால் முளைத்துப்போன நெற்கதிர்களை ஓரம் ஒதுக்காமல்கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)