Advertisment

மத்திய பட்ஜெட்... எடப்பாடி வரவேற்பு; ஸ்டாலின் எதிர்ப்பு!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்தியபட்ஜெட் குறித்துபல்வேறு அரசியல் கட்சியின் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்துதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி அறிக்கை வெளியிடுள்ளார். அதில்,

Advertisment

central Budget ... Edapati Welcome; Stalin's opposition

நாட்டுமக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைத்துள்ளது. விவசாயம்,பாசனவசதி, ஊரக வளர்ச்சியைமையமாக வைத்து இந்த பட்ஜெட்தயாரிக்கப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறையால் அடிக்கடி பாதிக்கும்தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். விளைநிலங்களில் சூரிய மின்சக்திஉற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்தற்கு தமிழகம் சார்பில் நன்றி எனக் கூறியுள்ளார்.

அதேபோல் இந்த மத்திய பட்ஜெட்தமிழக மக்களுக்குஎவ்விதபயனும் அளிக்காத பட்ஜெட்என்றுதிமுகதலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

central Budget ... Edapati Welcome; Stalin's opposition

கீழடிஆய்வுகளின் முடிவுகளை மாற்றி, வரலாற்றை திருத்தவும், திரிக்கவும் முயல்வதை தமிழகம் சகித்து கொள்ளாது. பாஜக விரும்பும் கலாச்சர திணிப்பை செய்யும்ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பதுவேதனையளிப்பதாக உள்ளது. பட்ஜெட்டில் அர்த்தமுள்ள திட்டங்களைஎதையும்காண முடியவில்லை. மத்திய அரசிற்கு தொலைநோக்குப்பார்வை இல்லை, தொலைந்து போன பொருளாதாரத்தைமீட்க வழியும் தெரியவில்லை. மத்திய பட்ஜெட்டில் திமுகவிற்கு மனநிறைவில்லை என்று கூறியுள்ளார்.

budget admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe