Advertisment

சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும் திட்டத்தை கை விட்டது மத்திய அரசு! 

sup

இந்தியா முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும் திட்டத்தை கை விடுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் பொதுமக்கள் பகிரும் தகவல்களை, கண்காணித்து, அவற்றை சேகரித்து அது குறித்து ஆய்வு செய்வதற்காக, சமூக ஊடக மையம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

Advertisment

அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி "சமீபத்தில் மத்திய அரசு இந்த சமூக ஊடக மையத்தில் கண்காணிப்பு பணிகளுக்கு என்று மென்பொருள் ஒன்றினை வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதையும், ஆகஸ்ட் 20ம் தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளதையும் தெரிவித்தார்.

"பொதுமக்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உள்ளிட்டவற்ற சமூக வலை தளங்களின் மீது ஆதிக்கம் செலுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த நாட்டினை ஒரு கண்காணிப்பின் கீழ் கொண்டு வர ஆசைப்படுவதை போல் தோற்றம் அளிக்கிறது என கருத்து தெரிவித்தனர். மேலும் இது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும், சமூக ஊடக மையம் தொடர்பான டெண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆகஸ்ட் 3ம் தேதிக்கு இந்த வழக்கினை ஒத்தி வைப்பதாக கடந்த முறை தெரிவித்தது.

இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர்.

மேலுல் இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரோ அல்லது ஒரு சட்ட அதிகாரியோ, நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சமூக வலைதளங்களை கண்காணிக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார், இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Supreme Court
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe