Cement prices soaring!

Advertisment

உற்பத்தி செலவுகள் அதிகரித்ததன் காரணாமாக, சிமெண்ட் விலை ஒரு மாதத்தில் சுமார் 12% அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சிமெண்ட் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பது போன்ற காரணங்களால் ஏப்ரல் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூபாய் 45 முதல் ரூபாய் 50 வரை உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை இந்த மாதத்தில் தான் சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால் ஒரு சிமெண்ட் மூட்டை உற்பத்திச் செய்ய 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை செலவு அதிகரித்துள்ளதாக முன்னணி சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.

Advertisment

வடஇந்தியாவில் சிமெண்ட் மூட்டை14% அதிகரித்து ஒரு மூட்டை ரூபாய் 431- க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலத்தில் 8% முதல் 10% அதிகரித்து ஒரு மூட்டை ரூபாய் 400 வரை விற்பனையாகிறது. இதேபோல் மேற்கிந்திய பகுதிகளில் 12%- மும், கிழக்கிந்திய பகுதிகளில் 13% முதல் 14% வரையிலும் சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு போல சிமெண்ட் விலை அதிகரித்து வருவதால், பரவலாக நாடு முழுவதும் சிமெண்ட் பொருட்கள் உள்ளிட்ட கட்டுமானங்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.