Advertisment

கட்சிக்கு ஊறு விளைவித்தவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் - செல்லூர் ராஜூ!

ரகத

அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் துவங்கியது. கட்சியின் அவைத் தலைவராக இருந்துவந்த மதுசூதனன் மறைந்ததை அடுத்து புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கட்சி விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இதுவரை கட்சி பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அந்த விதியில் தற்போது புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இனி கட்சி உறுப்பினர்களால் தலைமை தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே கூட்டம் முடிந்து செய்தியாளர்கள் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, " அதிமுகவில் சாதி,மதம் பார்க்க மாட்டோம். அனைவருக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படும். அந்த அடிப்படையிலேயே இந்த புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு ஊறு விளைவித்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். எனவே யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு இந்த நிலை தான் வரும். கட்சியினர் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.

Advertisment

sellur raju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe