/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_250.jpg)
திருச்சி மாநகரம், சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல். இவர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 22ஆம் தேதி இரவு சுப்பிரமணியபுரம் புதுக்கோட்டை பிரதான சாலையில் உள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக அவர், கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அய்யனார் கோவில் குண்டூர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (19) மற்றும் சுப்ரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் செல்போனை பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ராமகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட இவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)