செல்போனில் அடிக்கடி தொந்தரவு கொடுத்தஇலை வியாபாரியை பெண் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தமபாளையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

Dealer

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஆலமரத் தெருவில் குடியிருப்பவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (38). இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இலை வியாபாரம் செய்கிறார். இவரது மைத்துனர் எம்.பெருமாள்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (30). இவரது மனைவி நிரஞ்சனா (25). இவர்களுக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆனைமலையன்பட்டி என்ற ஊரில் மணிகண்டனும், பாண்டீஸ்வரனும் சேர்ந்து டீ கடை நடத்தி உள்ளனர். அப்போது பாண்டீஸ்வரன் மனைவி நிரஞ்சனாவின் மீது மணிகண்டனுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. கணவர் இல்லாத நேரங்களில் நிரஞ்சனாவை பாலியல் ரீதியாக அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.

Advertisment

இது நிரஞ்சனாவிற்கு பிடிக்கவில்லை. பலமுறை கணவருக்கு தெரியாமல் கண்டித்துள்ளார். டார்ச்சர் அதிகமாகவே கணவர் பாண்டீஸ்வரனிடம் கூறி உள்ளார். இதனையடுத்து அப்போது ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில்தான் டீக்கடையை காலி செய்து விட்டு, ராயப்பன்பட்டிக்கு மணிகண்டன சென்று இலை வியாபாரம் செய்கிறார்.பாண்டீஸ்வரனும், தனது மனைவி நிரஞ்சனாவுடன் பெருமாள் பட்டிக்கு சென்று குடியேறி விட்டார்.

ஆனாலும் மோகம் விடவில்லை. மணிகண்டன், தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு நிரஞ்சனாவிற்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை நிரஞ்சனாவும், கணவர் பாண்டீஸ்வரனும் பைக் ஒன்றில் மணிகண்டனை கண்டிப்பதற்காக ராயப்பன்பட்டி வந்துள்ளனர். மணிகண்டனிடம் எதற்காக இப்படி செய்கிறாய் என தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் நிரஞ்சனா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி உள்ளார். பாண்டீஸ்வரனும் வெட்டியதாக கூறப்படுகிறது. சராமரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சரிந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை தூக்கி கொண்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நடந்தவுடன் கணவனும், மனைவியும் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.