Advertisment

செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது விபத்து

cellphone charging incident erode district

செல்போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

Advertisment

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் கூழைமூப்பனேரைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர், தூங்கும்முன் செல்போனை சார்ஜில் போட்டுள்ளார். இந்த நிலையில், நள்ளிரவில் செல்போன் வெடித்ததில் ஏற்பட்ட தீ, அவர் படுத்திருந்த குடிசைக்குள் பரவியது. குடிசையில் சிக்கிக் கொண்ட அர்ஜுன் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல், உடல் கருகி இறந்தார்.

கணவரின் அலறல் சத்தம் கேட்டு, மற்றொரு வீட்டில் படுத்திருந்த மனைவி கஸ்தூரி மற்றும் அருகில் இருந்தவர்கள், வருவதற்குள் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அர்ஜுனை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சார்ஜில் இருந்த செல்போன் வெடித்திருப்பது தெரிய வந்தது.

incident Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe