Advertisment

கட்டுமான தொழிலாளர்களிடம் செல்போன் பறிப்பு... போலீசார் விசாரணை 

Cell phones confiscated from construction workers... Police investigation

கட்டுமான பணியாளர்களை மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அம்பத்தூர் மாதனாம்குப்பம் பகுதியில் கட்டுமானவேலை நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்திற்குள் கும்பலாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் உள்ளே புகுந்து தாக்கி, மிரட்டி தொழிலாளர்களிடமிருந்து செல்போன்களை பறித்து சென்றனர். அதனைத் தொடர்ந்து கட்டிடப் பணியாளர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அந்த இளைஞர் கும்பலை ஆவேசமாக துரத்திச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனையடுத்து கொரட்டூர் காவல் நிலையத்தில் கட்டுமான தொழிலாளர்கள் இதுதொடர்பாக புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கட்டுமான தொழிலாளர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Ambattur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe