
கள்ளக்குறிச்சியில் ஹோட்டல் கடை உரிமையாளரிடம் நன்கொடை கேட்டு வந்த ஒருவர் பேசிக்கொண்டே லாவகமாக செல்போனை திருடிச் செல்லும் டிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுதாகர் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று உள்ளது. இதில் நேற்று மதியம் கடைக்கு வந்த நபர் ஒருவர் கையில் அச்சடிக்கப்பட்ட பேப்பர் ஒன்றை கல்லாவில் இருந்த சுதாகரின் மனைவியிடம் காட்டி நன்கொடை கேட்டுள்ளார். அவரும் அந்த பேப்பரை வாங்கிப் பார்த்து விட்டு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.
அப்பொழுது அந்த நபர் நோட்டுக்கு அடியில் மேஜையில் இருந்த செல்போனை லாபகமாக திருடிச் சென்றார். செல்போன் காணாமல் போனதைத் தொடர்ந்து கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது இந்த திருட்டு தெரியவந்தது. ஹோட்டல் தரப்பு போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.