Advertisment

செல்போனில் பேச்சு... ஏட்டு சஸ்பெண்ட்...

வேலை நேரத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஏட்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Advertisment

வேலுார் சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி. இவர் ஒவ்வொரு கிளைச் சிறைகளிலும் ஆய்வு செய்து வருகிறார். அந்த அடிப்படையில் வாலாஜாபேட்டை கிளை சிறையில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.

cell-phone

அப்போது சிறைக்குள் பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு செந்தில்குமார் (45) என்பர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை கவனித்த டி.ஐ.ஜி. ஜெயபாரதி, இதுகுறித்து விசாரித்துள்ளார். இந்த நிலையில் வேலை நேரத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த செந்தில்குமாரை டி.ஐ.ஜி. நேற்று 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். மேலும் சிறைக்குள் செல்போனை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

Officer Action Talk cell phone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe